செல்போன்கள் திருடிய வாலிபர் கைது

மதுரையில் தனியார் நிறுவனத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாலிபர் கைது
வாலிபர் கைது
Published on

மதுரை

மதுரை களிமங்கலத்தைச்சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவர் சிலைமான் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கண்ணன் சம்பவத்தன்று காலை அலுவலகத்தில் இருந்தார். 

அப்போது அங்கு வேலை பார்த்த 2 பேர் செல்போனை கொடுத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் கண்ணன் வெளியே சென்றுவிட்டு திரும்பினார். அப்போது 2 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. 

இதுதொடர்பாக கண்ணன் சிலைமான் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராவை கைப்பற்றி அதில் இடம்பெற்றுள்ள காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர். 

அப்போது நரசிங்கம் மகன் ராட்டு என்கிற பெரியகருப்பன் (வயது 20) என்பவர் மேற்கண்ட 2 செல்போன்களை தெரிய வந்தது. இதையடுத்து சிலைமான் போலீசார் பெரியகருப்பனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com