search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை ஆக்கிப் போட்டி-18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, கனரா வங்கி அணி வெற்றி
    X

    18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி மற்றும் புனே கஸ்டம்ஸ் அணிகள் மோதிய காட்சி.

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை ஆக்கிப் போட்டி-18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, கனரா வங்கி அணி வெற்றி

    • சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் அணி 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
    • இன்று மாலை 19-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.

    5-ம் நாளான நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 16-வது லீக் ஆட்டத்தில் சென்னை, ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் மற்றும் தமிழ்நாடு போலீஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் சென்னை ஜிஎஸ்டி சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வெற்றிப் பெற்றது.

    17-வது லீக் ஆட்டத்தில் புது டெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி மற்றும் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய அணிகள் மோதின. இதில் 8:2 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி, பஞ்சாப் நேஷனல் பாங்க் அணி வெற்றிப் பெற்றது. 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி மற்றும் புனே கஸ்டம்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் 2:1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணி வெற்றிப் பெற்றது.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணி மற்றும் ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே அணிகள் மோதுகின்றன. 20-வது லீக் ஆட்டத்தில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு மற்றும் பெங்களூரு ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் ஆகிய அணிகள் மோதுகின்றன. 21-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி மற்றும் சென்னை இந்தியன் வங்கிஆகிய அணிகள் இரவு மோதுகின்றன.

    Next Story
    ×