search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை ஆக்கிப் போட்டி - 15-வது லீக் ஆட்டத்தில் பாம்போஷ் நிஸ்வாஸ் அணி வெற்றி
    X

    15-வது லீக் ஆட்டத்தில் ெரயில் வீல் பேக்டரி பெங்களூர் மற்றும் பாம்போஷ் நிஸ்வாஸ் ஆக்கி அணி ஆகிய அணிகள் மோதிய காட்சி.

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை ஆக்கிப் போட்டி - 15-வது லீக் ஆட்டத்தில் பாம்போஷ் நிஸ்வாஸ் அணி வெற்றி

    • 11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
    • இன்று மாலை நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. செ ன்ட்ரல் எக்ஸைஸ் சென்னை மற்றும் தமிழ்நாடு போலீஸ் சென்னை ஆகிய அணிகள் மோதுகின்றன.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்ட ளையின் சார்பில், கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 5-ம் நாளான இன்று (திங்கள்கிழமை) நடை பெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் ெரயில் வீல் பேக்டரி பெங்களூர் அணி மற்றும் பாம்போஷ் நிஸ்வாஸ் ஆக்கி அணி ஆகிய அணிகள் காலை 7 மணிக்கு மோதின. இதில் 4:2 என்ற கோல் கணக்கில் நிஸ்வாஸ் ஆக்கி அணி பாம்போஷ் வெற்றிப் பெற்றது.

    இன்று மாலை நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. செ ன்ட்ரல் எக்ஸைஸ் சென்னை மற்றும் தமிழ்நாடு போலீஸ் சென்னை ஆகிய அணிகள் மோதுகின்றன. 17-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க் புதுடெல்லி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சென்னை ஆகிய அணிகள் மோதுகின்றன. 18-வது லீக் ஆட்டத்தில் கனரா பேங்க் பெங்களூரு மற்றும் கஸ்டம்ஸ் புனே ஆகிய அணிகள் மோது கின்றன.

    நாளை (23-ந்தேதி) 19-வது லீக் ஆட்டத்தில் யூனி யன் பேங்க் மும்பை மற்றும் சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே ஹூப்ளி ஆகிய அணிகள் மோதுகின்றன. 20-வது லீக் ஆட்டத்தில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு புது டெல்லி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் செ ன்டர் பெங்க ளூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. 21-வது லீக் ஆட்டத்தில் கனரா பேங்க் பெங்களூரு மற்றும் இந்தியன் பேங்க் சென்னை ஆகிய அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×