பாம்பு கடித்து கல்லுாரி மாணவர் சாவு

பாம்பு கடித்து கல்லுாரி மாணவர் உயிரிழந்தார் திறந்த வெளிபகுதிக்கு சென்றார்
பாம்பு கடித்து கல்லுாரி மாணவர் சாவு
Published on

கரூர்:

தரகம்பட்டியை அடுத்த, அத்திகுளத் துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் சத்தியமூர்த்தி (வயது 19). தரகம்பட்டி அரசு கலை கல்லுாரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் உள்ள திறந்த வெளி பகுதிக்கு சென்றார். அப்போது சத்தியமூர்த்தியை பாம்பு கடித்தது. இதையடுத்து, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சரவணன் அளித்த புகாரின் படி, விசாரிக்கின்றனர். பாலவிடுதி போலீசார் விசாரிக்கின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com