சிவப்பு எள் ஒரு கிலோ ரூ.93-க்கு ஏலம்

சிவப்பு எள் ஒரு கிலோ ரூ.93-க்கு ஏலம் போனதுக.பரமத்தி விவசாயிகள் மகிழ்ச்சி
சிவப்பு எள் ஒரு கிலோ ரூ.93-க்கு ஏலம்
Published on

கரூர்:

கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி,கரூர் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளில் உள்ளன. இதில் பெரும்பாலும் கிராம புறங்களில் மானாவாரி நிலங்களில் எள், கம்பு, சோளம் போன்ற பல விதமான பணப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்து பிழைத்து வரு கின்றனர். குறிப்பாக க.பரமத்தி ஒன்றியத்தில் பவித்திரம், புன்னம், காருடையாம்பாளையம், நெடுங்கூர், க.பரமத்தி, குப்பம், முன்னூர், அத்திப்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிகமாக மானாவாரி நிலங்களில் எள் விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்கின்றனர். தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ளவற்றை அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத் திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு 4 மூட்டை சிவப்பு எள் எடைக்கு நடந்த ஏலத்தில் ஒரு கிலோ குறைந்த விலையாக ரூ.88, அதிக விலையாக கிலோ ரூ.93-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com