கேரளாவிற்கு அதிக பாரத்துடன் கனிம வாளங்கள் ஏற்றி சென்ற 2 லாரிகள் பறிமுதல்

கேரளாவிற்கு அதிக பாரத்துடன் கனிம வாளங்கள் ஏற்றி சென்ற 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்
Published on: 

கன்னியாகுமரி:

குழித்துறை, களியக்கா விளை பகுதியில் விளவங் கோடு  தாசில்தார் ரமேஷ்பாபு தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் ரோந்து பணி யில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கர்நாடகா மற்றும் கேரள பதிவு எண் கொண்ட 2 டாரஸ் லாரிகள் கேரளாவிற்கு எம்.சாண்ட் மற்றும் பாறை கற்களை ஏற்றி வந்தன. இதனை தடுத்து நிறுத்திய விளவங்கோடு தாசில்தார் ரமேஷ் பாபு வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்தார். 

அப்போது அனுமதிக்க பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 வாகனங்களையும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.  

2 டாரஸ் லாரிகளில் ஏற்றி வந்த கனிம வளங்களின் எடை மற்றும் கேரளா கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்த மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் அதிக பாரம் ஏற்றியதாக 2 டாரஸ் லாரிகளுக்கும் ரூ.85 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com