கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள திருவள்ளுவர் சிலையில் படிந்துள்ள உப்பு தன்மையை அகற்ற காகித கூழ் பூசும் பணி தீவிரம்

வல்லுனர் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள திருவள்ளுவர் சிலையில் படிந்துள்ள உப்பு தன்மையை அகற்ற காகித கூழ் பூசும் பணி தீவிரம்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது.

இந்தசிலை கடல் உப்புக் காற்றினால் பாதிப்ப டையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

தற்போது ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடை பெற்றுவருகிறது. இந்த பணி கடந்த ஜூன் மாதம்

6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மைஅகற்றப்பட்டு கடுக்காய் சுண்ணாம்பு பனைவெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றது. தற்போது திருவள்ளுவர் சிலையில் படிந்துஉள்ள உப்புதன்மையை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்ட காகித கூழ் பூசும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு அடுத்த கட்டமாக சிலையில் மீண்டும் நல்ல தண்ணீர் பாய்ச்சி கழுவி சுத்தம் செய்த பிறகு ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் பாரதி தேவி, மத்திய மின் வேதியியல் ஆய்வு நிலைய தலைமை விஞ்ஞானிகள் டாக்டர் சரஸ்வதி, டாக்டர் முரளிதரன், டாக்டர் அருண் சந்திரன், தொல்லியல் துறை உதவி கண்காணிப்புவேதியலாளர்பிரஷோபராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக திட்ட பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், கன்னியாகுமரி தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் யுவராஜ் உள்படதொல்லியல் துறை வல்லுனர்கள் மற்றும் காரைக்குடியை சேர்ந்த கெமிக்கல் நிறுவன வல்லுநர்கள் கன்னி யாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தனர்.

பின்னர் இந்த குழுவினர் இதுகுறித்து கன்னியாகுமரி வந்த தமிழக சுற்றுலாத்துறை ஆணையரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனருமான சந்திப் நந்தூரியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com