

மணவாளக்குறிச்சி :
கூட்டுமங்கலம் ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தாளாளர் ரெஜீஷ் கிருஷ்ணன் மற்றும் முதல்வர் தங்கசுவாமி முன்னிலை வகித்தனர்.
நாகர்கோவில் அய்யப்பா மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் அஞ்சனா, ஏ.டி.எஸ்.பி.க்கள் சகாயஜோஸ், மதியழகன், டி.எஸ்.பி. நாராயணன், தனியார் பள்ளி டி.இ.ஒ. முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். பெங்களூரூ தனியார் நிறுவன டைரக்டர் அஷ்வின் ராம்நாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பத்மஸ்ரீ, ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் பொன்னுலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூவலிங்கம், துணை தலைவர் கிரி, சட்ட ஆலோசகர் பிரேம்ஜித் கவுதம், அஜய்குமார், சாய்கு மார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.