புலி நடமாட்டத்தால் அச்சம் - வேலைக்கு செல்லாத ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்

அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் அபாயம்கேமராவில் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.
புலி நடமாட்டத்தால் அச்சம் - வேலைக்கு செல்லாத ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்
Published on: 

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் சிற்றாறு வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்துடன் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் குடியிருப்பு பகுதிக்கு வந்த புலி, அங்கிருந்த ஆடு-பசுமாட்டை கடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வனப்பகுதியினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வனப்பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பல்வேறு இடங்களில் மாட்டி இரவு- பகலாக கண்காணித்தனர். ஆனால் கேமராவில் புலியின் உருவம் எதுவும் பதிவாகவில்லை.

இருப்பினும் புலி நடமாட்டம் குறித்த அச்சம் அந்தப் பகுதி மக்களிடம் உள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மாட்டோம் என்று அறிவித்து வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அதிகாலையில் வேலைக்கு செல்லும் போது புலி வந்தால் எங்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை என்று அவர்கள் கூறி வருகின்றனர். புலியை பிடித்தால் மட்டும் தான், தாங்கள் வேலைக்கு செல்ல முடியும், தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரியிடம் அவர்கள் மனு கொடுத் துள்ளனர்.

இவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதற்கிடையில் பள்ளி-கல்லூரிக்கு செல்ல மாணவ-மாணவிகளும் அச்சப்படுகிறார்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்லாததால் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது.

எனவே வனத்துறையினர் கண்காணிப்பை அதிகப்படுத்தி புலியின் நடமாட்டத்தை கண்டறிந்து அதை பிடித்து வனத்தில் விட்டால் மட்டும் தான் அந்த பகுதி மக்களிடையே நிம்மதி ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com