கன்னியாகுமரியில் தண்ணீர் இல்லாத தெப்பக்குளத்தில் நடந்த பகவதி அம்மன் தெப்ப திருவிழா

குளக்கரையில் அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை வைத்து பூஜை நடத்தினர்பகவதி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடும் தீபாராதனையும் நடந்தது.
கன்னியாகுமரியில் தண்ணீர் இல்லாத தெப்பக்குளத்தில் நடந்த பகவதி அம்மன் தெப்ப திருவிழா
Published on

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10-ம் திருவிழாவான நேற்று காலையில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. இரவு 8.30 மணிக்கு பஜனை மடத்தில் வைத்து கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் முன்னாள் மேலாளர் சொக்கலிங்கம் பிள்ளை சார்பில் மண்ட கப்படி நிகழ்ச்சி நடந்தது. அப்போது பகவதி அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடும் தீபாராதனையும் நடந்தது.

இதில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த், மண்டகப்படி கட்டளைதாரர்கள் கண்ணன், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து நர்த்தன பஜனை நடந்தது. 10 மணிக்கு தெப்பத்திருவிழா நடந்தது. இந்த தெப்பத்திருவிழா கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் நடந்தது. இதையொட்டி பல வண்ண மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட வாகனத்தில் பகவதி அம்மனை எழுந்த ருள செய்து கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெப்பக்குளத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் தெப்பக் குளத்தில் தண்ணீர் இல்லா ததால் மேற்குப் பக்கம் உள்ள குளத்தின் கரையில் போடப்பட்டிருந்த பந்தலில் அம்மன் எழுந்தருளி இருந்த வாகனத்தை வைத்து பூஜைகள் நடத்தினர். பின்னர் அம்மனுக்கு தீபா ராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தண்ணீர் இல்லாமல் தெப்பக்குளம் வறண்டு கிடந்ததால் தெப் பக்குளத்தின் கரையில் வைத்து அம்மனுக்கு பூஜை கள் நடத்தியதை பார்த்து பக்தர்கள் கண் கலங்கினர். பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு முக்கடல் சங்க மத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com