சங்கரன்கோவிலில் கக்கன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கக்கனின் எளிமை, நேர்மை பற்றி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் பேசினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கக்கன் உருவப்படத்திற்கு நகர காங்கிரஸ் பொருளாளர் வைத்தியர் மனோகரன் தலைமையில் மாலை அணிவித்த காட்சி. 
கக்கன் உருவப்படத்திற்கு நகர காங்கிரஸ் பொருளாளர் வைத்தியர் மனோகரன் தலைமையில் மாலை அணிவித்த காட்சி. 
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. சங்கரன்கோவில் தியேட்டர் சாலையில் அமைந்துள்ள அம்பேத்காரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நகர காங்கிரஸ் பொருளாளர் வைத்தியர் மனோகரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் நிர்வாகி சித்திரைகண்ணு, அந்தோணி, ராஜேந்திரன், சங்கர மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மனோகரன் கக்கனின் எளிமை நேர்மை பற்றி பேசினார்.

இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பீர்முகமது, சங்கரன் ஏட்டையா, ரஷீத், தங்கராஜ், கருப்பசாமி, முருகன், ஆறுமுகம், மாடகண்ணு, சமுதாய நாட்டாண்மை சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com