விளாத்திகுளத்தில் இன்று பயங்கரம்- மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்

லட்சுமணன் 2 ஆண்டு களுக்கு முன்பு குமரன் நகர் பகுதில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார்.லட்சுமணன் அம்பிகாபதி வைத்திருந்த அரிவாளை பிடுங்கி வெட்டியதாக கூறப்படு கிறது.
அம்பிகாவதி.
அம்பிகாவதி.
Published on

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்.

இவர் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு விளாத்தி குளம்-மதுரை சாலையில் உள்ள குமரன் நகர் பகுதில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார்.

இவர் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அம்பிகாபதி. ராமச்சந்திரா புரம் கிராமத்தில் ரேஷன் கடையில் பணி யாற்றி வந்தார்.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந் நிலையில் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரண மாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருவது வழக்க மாக இருந்துள்ளது.

லட்சுமணன் இரவு பணியை முடித்து விட்டு தினம்தோறும் இரவு 11 மணிக்கு வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை தனது வீட்டிற்கு திடீரென லட்சு மணன் சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் உள்ளிருந்து வந்த அம்பிகா பதி இப்போது எதற்கு வந்தீர்கள் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் லட்சுமணன் அம்பிகாபதி வைத்திருந்த அரிவாளை பிடுங்கி வெட்டியதாக கூறப்படு கிறது.

இதில் சம்பவ இடத்திலே அம்பிகாபதி துடிதுடித்து இறந்தார். அக்கம் பக்கத்தி னர் விளாத்திகுளம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அம்பிகா வதி உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லட்சு மணனையும் தேடி வருகின்ற னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com