நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்- 30-ந்தேதி நடக்கிறது

எரிவாயு நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்- 30-ந்தேதி நடக்கிறது
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com