ஆலங்குளத்தில் நாளை இலவச எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாம் - யூனியன் சேர்மன் ஏற்பாடு

முகாமில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாமிற்கு வருபவர்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.
திவ்யா மணிகண்டன்
திவ்யா மணிகண்டன்
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஸ்ரீ சக்தி மருத்துவமனை மருத்துவர் வெங்கடேஷ் பாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன் ஏற்பாட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலகம், நெல்லை ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து நடத்தும், இலவச எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிறபகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதில் ஸ்ரீ சக்தி மருத்து வமனை மருத்துவர்கள் வெங்கடேஷ் பாபு, சுமதி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனர்.

முகாமில் மூட்டு தேய்மானம், மூட்டு வீக்கம், இடுப்பு மற்றும் கழுத்து வலி, தண்டுவட மற்றும் வாதநோய் பிரச்சனை, தோள்பட்டை அல்லது மணிக்கட்டு வலி, உடல் எடை குறைவு மற்றும் கூன் விழுதல், முதுகு வலி உள்ளிட்ட அனைத்து விதமான எலும்பு சம்பந்தப்பட்ட நோய்க ளுக்கும் தீர்வு காணலாம்.

மேலும், வருங்காலங்க ளில் எலும்பு பலவீனத்தால் எலும்பு முறிவு பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கும் வகையில், முகாமிற்கு வருபவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள எலும்பு ஸ்கேன் பரிசோதனை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.

எனவே, முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் 94425 91760, 94878 10000 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com