வெள்ள நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்-தே.மு.தி.க. வலியுறுத்தல்

விவசாயிகளின் கோரி க்கையை ஏற்று பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்க தே.மு.தி.க. வலியுறுத்துகிறது.மழை பாதித்த மாவட்டங்களில் திமுகவின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேமுதிக வரவேற்பு தெரிவிக்கிறது.
தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டார்.
தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டார்.
Published on

தரங்கம்பாடி:

திருக்கடையூர் அமிர்த கடைஸ்வரர் கோவிலில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்கிறார்கள்.

இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகன்கள் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், நடிகர் சண்முக பாண்டியன் ஆகியோர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து திருக்கடையூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பார்வையிட்டு செய்தி யாளர்களிடம் கூறுகையில்:-

விவசாயிகளின் கோரி க்கையை ஏற்று பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்க தே.மு.தி.க. வலியுறுத்துகிறது.

அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம், மயிலாடுதுறை தாலுகாவிற்கு நிவாரணம் தொகையை அறிவிக்க வேண்டும்.

மேலும் நிவாரண உதவிகளை உடனே வழங்க வேண்டும்.சென்னை உள்பட மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட மழை பாதித்த மாவட்டங்களில் திமுகவின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேமுதிக வரவேற்பு தெரிவிக்கிறது என்றார்.

அவருடன் கட்சி பொருப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com