ரூ.11 லட்சத்து 37 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு 293 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.தேங்காய்பருப்பு 11 லட்சத்து 37 ஆயிரத்து 957-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ரூ.11 லட்சத்து 37 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
Published on

மொடக்குறிச்சி:

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு 293 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 82 ரூபாய் 77 காசுக்கும், அதிகபட்ச விலையாக 84 ரூபாய் 67 காசுக்கும், சராசரி விலையாக 84 ரூபாய் 55 காசுக்கும், ஏலம் போனது.

இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 92 காசுக்கும், அதிகபட்ச விலையாக 78 ரூபாய் 69 காசுக்கும், சராசரி விலையாக 76 ரூபாய் 65 காசுக்கு ஏலம் போனது.

மொத்தமாக 14,278 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 11 லட்சத்து 37 ஆயிரத்து 957-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com