தி.மு.க. சார்பில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை

பல்லடம் நகராட்சி 2வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான செ.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில்  இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை
Published on

பல்லடம் :

பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பாக இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், பல்லடம் நகராட்சி 2வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான செ.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தெற்கு பாளையம், நாரணாபுரம், சேடபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ராஜேந்திர குமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், மார்க்கெட் தங்கவேல், கவுஸ் பாஷா, தினேஷ் குமார், சிலம்பரசன், கதிரேஷ்குமார், தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com