கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி விநாயகர், சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய அய்யர், முத்துமணி சங்கர் ஆகியோர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com