செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் தீபாவளி பண்டிகை

தீபாவளி கொண்டாட்டத்தில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர், முதல்வர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் தீபாவளி பண்டிகை
Published on

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் மழலையர் பிரிவு மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பட்டாசு வெடித்தும், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கூறினர். மேலும் மணவ, மாணவிகளை பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட அறிவுறுத்தினர். ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனுசியா செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com