மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்- கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.ஒட்டுமொத்த பள்ளிகளுக்கான சாம்பியன் கோப்பை கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் பாராட்டினார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் பாராட்டினார்.
Published on

வள்ளியூர்:

வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடங்குளம் ஹார்வேர்ட் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றனர்.

சூப்பர் சீனியர் பிரிவில் குண்டு வீசுதல் மற்றும் தட்டு வீசுதல் போட்டிகளில் முதல் பரிசை பெற்றனர். ஈட்டி எறிதல் போட்டியில் ஆஷிக் முதல் பரிசையும், வின்சர் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

400 மீட்டர் ஓட்டத்தில் நவீன் குமார் முதல் பரிசையும், 100 மீட்டர் ஓட்டத்தில் பவுல்ராஜ் இரண்டாம் இடமும் பெற்றனர். செல்வ ஜீவன் தட்டு வீசுதலில் இரண்டாம் இடம் பெற்றார். செல்வ சுபினேஷ் சாய் செல்வா ஆகியோரும் சிறப்பு பரிசுகளை பெற்றனர்.சூப்பர் சீனியர் மாணவிகள் பிரிவில் ஜார்ஜ் ரோமிஸ்ரீ ஈட்டி எறியும் போட்டியில் முதலிடமும், பிளஸ்சி குண்டு வீசுதலில் இரண்டாம் இடமும், பிரதிக்ஷா தட்டு எறிதல் போட்டியில் இரண் டாம் இடமும் பெற்றனர்.

சூப்பர் சீனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் கோப்பையை ஜெப்ரின் வென்றார். ஒட்டுமொத்த பள்ளிகளுக் கான சாம்பியன் கோப்பை கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ், முதல்வர் முருகேசன், உடற்பயிற்சி இயக்குனர் சுந்தர், தடகள பயிற்சியாளர் மோதிலால் ஆகியோர் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com