

சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்தாகி விடுமோ என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. பொதுத்தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்தும் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.