ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ்

தபால் அலுவலகத்தில் வழங்கப்படும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க சிறப்பு முகாம் திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள  தலைமை தபால் நிலையத்தில் நடந்தது. இது குறித்து இந்திய போஸ்ட் பேமண்ட் பேங்க் வங்கி மேலாளர் சத்யபிரபு கூறியதாவது:-

மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இவர்கள் தபால் அலுவலகத்தில் வழங்கப்படும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவையினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வயதானவர்கள் என்பதால் பெரும்பாலானோர் நேரடியாக வரவில்லை.15க்கும் குறைவானவர்களே முகாமில் பங்கேற்றனர். ஆதார்,  செல்போன் எண், 13 இலக்க ஓய்வூதிய எண், ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களுடன் கைவிரல் ரேகையை பதிவு செய்வதன் மூலம் டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்து கொள்ளலாம். 

நேரடியாக வர இயலாதவர்கள் அருகில் உள்ள தபால்காரர்களை தொடர்புகொண்டு வீட்டில் இருந்தே சேவை பெறலாம்.  வருகிற 31-ந்தேதி கடைசி நாள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com