"லிப்ட்" கேட்டு துணிகரம்- வாலிபரிடம் நகை பறித்த திருநங்கை

சாலையோரம் “டிப் டாப்” உடை அணிந்து நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் கை காட்டி “லிப்ட்” கேட்டார்.காரை நிறுத்திய விஷால் திருநங்கையை காருக்குள் ஏற்றிக் கொண்டார்.
"லிப்ட்" கேட்டு துணிகரம்- வாலிபரிடம் நகை பறித்த திருநங்கை
Published on

சென்னை, அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் விஷால் (18).பெங்களூரில் தங்கி விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் விடுமுறையில் சென்னை வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு விஷால் தனது காரில் வீடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். கே.கே நகர் 80-அடி சாலையில் வந்தபோது சாலையோரம் "டிப் டாப்" உடை அணிந்து நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர் கை காட்டி "லிப்ட்" கேட்டார்.

இதையடுத்து காரை நிறுத்திய விஷால் திருநங்கையை காருக்குள் ஏற்றிக் கொண்டார். கார் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் திடீரென விஷால் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்த திருநங்கை காரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com