search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் புதிய சாலை அமைக்கும் பணி - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.  தொடங்கி வைத்தார்
    X

    கோவில்பட்டியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    கோவில்பட்டியில் புதிய சாலை அமைக்கும் பணி - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • சண்முகநகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேமபாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை தொடக்கவிழா நடைபெற்றது.
    • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி இலுப்பை யூரணி பஞ்சாயத்திற் குட்பட்ட சண்முகநகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேமபாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை தொடக்கவிழா நடைபெற்றது. கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோவில் பட்டி யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி, நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் மாவட்ட சேர்மன் சத்யா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கவி யரசன், செண்பக மூர்த்தி, வள்ளி யம்மாள், மாரியப்பன், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, மாவட்ட பொருளாளர் அம்பிகா வேல்மணி, முன்னாள் ஒன்றிய செய லாளர் போடு சாமி, மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் செல்வக்குமார், இளைஞர் பாசறை வானரமூட்டி பழனிக்குமார், மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் தாஸ்அய்யனுராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹேமலா, திட்டங்குளம் ஜெயந்தி சரவணசாமி, அன்னை தெரசா நகர் கிளை செய லாளர்- இலக்கிய அணி மேற்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, வக்கீல்கள் சிவபெருமாள், சங்கர் கணேஷ், பழனிக் குமார், நகர அவைத்தலைவர் அப்பாசாமி, ஒன்றிய துணைச்செயலாளர் பீக்கிலி பட்டி மணிராஜ், அழகர்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் நாலாட்டின்புத்தூர் அய்யலுராஜன், மகளிரணி கோமதி அய்யலுராஜன், மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் நகரப் பொருளாளர் வேல்முருகன், குழந்தைராஜ், ஜெயசிங், கோபி, 11-வது வார்டு செய லாளர் ரவிசந்திரன், பாடகர் முத்தையா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அங்கு சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×