கோவையில் வாலிபர் தற்கொலை

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கோவை:

கோவை வேலாண்டிபாளையம் அருகே உள்ள மருதகோனார் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் தினேஷ் (வயது 26). கடந்த மாதங்களுக்கு முன்பு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதற்காக அவரை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய தினேஷ் தொடை வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை பார்த்து அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

பின்னர் தற்கொலை செய்து கொண்ட தினேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com