கோவையில் தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு

அன்னூர் ஓதிமலை ரோடு அருகே செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் முகமது பிரோஸ் அருகே சென்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கோவை,  

பீகாரை சேர்ந்தவர் முகமது பிரோஸ் (வயது 21). இவர் கோவை அன்னூரில் பகுதியில் தங்கி கட்டிட வேலை சென்று வருகிறார். 

சம்பவத்தன்று இவர் அன்னூர் ஓதிமலை ரோடு அருகே செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் முகமது பிரோஸ் அருகே சென்றனர். 

அவர்கள் திடீரென முகமது பிரோஸ் கையில் இருந்த செல்போனை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அங்கு ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் செல்போனை பறித்து சென்ற 3  வாலிபர்களையும் துரத்திச் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர்கள் வேகதாக சென்றனர். ஆனால் விடாமல் துரத்தி சென்று அந்த 3 வாலிபர்களையும் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். 

அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காரமடையை  சேர்ந்த மணிகண்டன் (28), அவரது நண்பர்கள் மேட்டுப்பாளையத்தை  சேர்ந்த கணேசன் (36), சிறுமுகையை சேர்ந்த ஆன்றோ அரவிந்த் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செல்போனை பறித்து சென்ற திருடர்களை விரைந்து வந்து மடக்கி பிடித்த போலீசாரை பொது மக்கள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com