நத்தத்தில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி

நத்தத்தில் லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்ததுவெற்றி பெற்று தகுதி அடைந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
சதுரங்க போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சதுரங்க போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
Published on

நத்தம்:

நத்தத்தில் லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளை லாண்டீஸ் பள்ளியின் தாளாளர் நிக்சன்லாண்டீஸ் தொடங்கி வைத்தார்.

இதில் வட்டார அளவில் இருந்து 33 அணிகள் கலந்து கொண்டன. முடிவில் 14 வயதிற்குட்பட்டோருக் கான போட்டியில் துரைக்கமலம் மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியும், 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கொசவபட்டி புனித செயின்ட் ஜோசப் பள்ளியும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.

தொடர்ந்து வெற்றி பெற்று தகுதி அடைந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் சோலமலை, சுரேஷ், ஜோதிமுருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com