

சென்னை:
சென்னைத் துறைமுக ஆணையத் தலைவரும் காமராஜர் துறைமுக மேலாண் இயக்குநருமான சுனில் பாலிவால் சென்னைத் துறைமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சென்னைத் துறைமுகம் நாட்டிலேயே அதிகளவில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களைக் கையாளும் துறைமுகமாக உள்ளது.
சென்னைத் துறைமுகம் 2021 -2022ஆம் ஆண்டு நிதியாண்டில் 111 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது. காமராஜர் துறைமுகம் சுமார் 531.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது
சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையேயான பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் ரூ.5800 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. 30 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமையவுள்ளது. அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.