மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்- மாதிரி வினாத்தாள்கள் அரசு வலைதளத்தில் பதிவேற்றம்

நடப்பு நிகழ்வுகள், பாடநூல்கள் பழைய வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள், பதிவேற்றம்.போட்டித்தேர்வர்கள் மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
Published on

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு. அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – I , தொகுதி – II/II-A , தொகுதி – IV/VAO மற்றும் தொகுதி – VII/VIII ஆகிய தேர்வுகளுக்கும் மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் IBPS, SSC, RRB, INDIAN POSTAL SERVICE,UPSCதேர்வுகளுக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பாடநூல்கள் பழைய வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள், கேள்வி & பதில்கள் ஆகியன https://tamilnaducareerservices.tn.gov.in வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வர்கள் Virtual Learning Portal - Tamil Nadu | Login  என்ற மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் (Virtual Learning Portal) தங்களைப் பற்றிய விவரங்களை உள்ளீடு செய்து, இவ்வலைதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர், சு. அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com