சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் சிவனேசன் கலந்துகொண்டார். திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை:

மேகதாது அணை விவகாரம், கனிமவள கொள்ளை, டாஸ்மாக் கடைகளை மூடுதல், சட்டம்-ஒழுங்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம், பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு உள்ளிட்டவை தொடர்பாகவும், திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் 120வது வட்டத் தலைவர் இளையராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் சிவனேசன் கலந்துகொண்டார். மாவட்ட துணைத் தலைவர் சுமோ சுரேஷ், மீனவர் பிரிவு மாநில செயலாளர் பிரேம்குமார், திருவல்லிக்கேணி தெற்கு மண்டல் தலைவர் முனுசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com