வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ -ஜூடோவில் பாரத் மாண்டிசோரி பள்ளி சாதனை

17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் யுவராஜ், நித்தின் அபினேஷ் தங்க பதக்கம் வென்றனர். தங்க பதக்கம் வென்ற 6 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ -ஜூடோவில் பாரத் மாண்டிசோரி பள்ளி சாதனை
Published on

தென்காசி:

தென்காசி அருகே உள்ள அச்சம்பட்டி எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகள் நடைபெற்றது. டேக்வோண்டோ போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர் தேவேஷ் காளிதாஸ் தங்க பதக்கமும், சுபாஷினி வெள்ளி பதக்கமும் , பிரணவ், ஜீவா, மாணவி ஹர்சிதா ஸ்ரீ ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் யுவராஜ் மற்றும் நித்தின் அபினேஷ் தங்க பதக்கம் வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோகுல சுதன், திருமலைவிஸ்வா, சிவபிரதீப் ஆகியோர் தங்க பதக்கம் பெற்றனர்.

மேலும் மாணவர் செண்பகநாதன் வெள்ளி பதக்கமும், ஜெய்சன் நீல் வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஜீடோ போட்டியில் மாணவர் மகேஷ் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தார். டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் வென்ற 6 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com