மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் தேர்வு முகாம்

முடல் நீக்கியல் வல்லுநர் ரூபன்ஸ்மித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 19 மாற்றுதிறனாளிகள் உபகரணங்கள் வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
உபகரணங்கள் வழங்க தேர்வு முகாம் நடைபெற்றது.
உபகரணங்கள் வழங்க தேர்வு முகாம் நடைபெற்றது.
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்திக் கழகம் சமூக செயலாற்றுகிற பொறுப்பி ன் கீழ் மாற்று த்திறனா ளிகளுக்கான உதவி உபகரணங்கள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.

கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகா ஷ் தலைமையே ற்று முகாமை தொடக்கி வைத்து பேசினார். கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, முடல் நீக்கியல் வல்லுநர் ரூபன்ஸ்மித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்ட 19 மாற்றுதி றனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் பொருத்தப்பட்ட வாகனம், ஊன்றுகோல் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கு வதற்கு தேர்வு செய்ய ப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com