search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள், பேராசிரியர்கள்.

    நிலக்கோட்டையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

    • கல்லூரி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலைக்கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்.
    • இப்பேரணியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலைக்கல்லூரி முதல்வர் லதா பூரணம் தொடங்கி வைத்தார்.

    நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி முன்னிலை வகித்தார். பேரணி நிலக்கோட்டை வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள செங்கட்டாம்பட்டி பிரிவில் தொடங்கி நால்ரோடு வழியாகச் சென்று நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் முடிவடைந்தது.

    நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இப்பேரணியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×