டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் நாராயண ராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி கல்லூரி அறிக்கையை வாசித்தார். முன்னாள் மாணவரும், கல்லூரி மின்னணு தகவல் தொடர்பு துறை பேராசிரியரும், பயின்றோர் கழக செயலாளருமான ஜோஸ்வா பாபு வரவேற்று பேசினார். வேலைவாய்ப்பு அலுவலர் பொன்னுகிருஷ்ணன் வேலைவாய்ப்பு அறிக்கையை வாசித்தார்.

முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கல்லூரியில் படித்த அனுபவங்களையும், தற்போது பணியாற்றும் பணிகள் குறித்தும் உரையாற்றினர். முன்னாள் மாணவர்களான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மூத்த துணை போக்குவரத்து மேலாளர் ரமேஷ், மூத்த தொழில்நுட்ப கட்டிட கலைஞர் ஸ்ரீராம் பாலாஜி, சென்னை இன்போசிஸ் நிறுவன அதிகாரி முகமது முனாவர் உசேன், சோகோ நிறுவன அதிகாரி முகமது இப்ராஹிம் அன்சாரி, அமேசான் நிறுவன அதிகாரி பிரபாகரன், டேட்டா என்ஜினீயர் ராஜாராம், ஆராய்ச்சி மாணவி நூர்பஸ்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியரும், பயின்றோர் கழக பொருளாளருமான சித்ராதேவி கணக்கு அறிக்கையை வாசித்தார். கணினி துறை பேராசிரியரும், பயின்றோர் கழக துணை செயலாளருமான ஜென்சி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com