அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.
புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டபோது எடுத்த படம்.
புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டபோது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குன்னமலை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி போடும் முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

இக்கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com