search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு மலைச் சாலை தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியம்
    X

    ஏற்காடு மலைசாலையில் உள்ள சுவற்றில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ள காட்சி.    

    ஏற்காடு மலைச் சாலை தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியம்

    • சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
    • இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சேலம்:

    சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற நாளை(வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளில் 188 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். சேலம் மாவட்டத்தில் அதனைப் பிரபலப்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. மலைப் பகுதியான ஏற்காட்டிற்கு நாள்தோறும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சதுரங்கப் போட்டிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வுக் கோலங்கள் வரைதல், பேரணிகள், காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கான செஸ் போட்டிகள் உள்ளிட்ட விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பள்ளி வாகனங்கள், பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் அடங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்தல், செல்பி பாயிண்ட் அமைத்தல் மற்றும் வண்ண பலூன்களை பறக்க விடுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    Next Story
    ×