வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் கசிவை மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
Published on

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அனல்மின் நிலைய 2-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் கசிவை மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com