486 கவுன்சிலர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பதவி ஏற்றனர்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 486 புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்றனர்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவில் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழாவில் மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகள் உள்ளன.

திண்டுக்கல் மாநகராட்சிகள் 48 வார்டுகள், பழனியில் 33 வார்டுகள், ஒட்டன்சத்திரத்தில் 18 வார்டுகள், கொடைக் கானலில் 24 வார்டுகள் உள்ளன. மேலும் 23 பேரூராட்சிகளிலும் 363 வார்டுகள் என மொத்தம் 486 வார்டுகள் உள்ளன. இந்த பதவிக்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 2 பேர், 5 பேரூராட்சிகளில் 6 பேர் என மொத்தம் 8 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 478 பதவிகளுக்கு 2061 பேர் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவியேற்பு விழா இன்று காலை மாநகராட்சி, அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சியில் வெற்றி பெற்ற 48 உறுப்பினர்களும், ஆணை யாளர் முன்னிலையில் பதவி யேற்றுக் கொண்டனர். இதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. முன்னதாக விழா தொடங்கும் முன்பு பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.

வெற்றி பெற்ற உறுப்பி னர்கள் மேளதாளங்கள் மற்றும் தாரைதப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்தனர். இதனால் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலை வர்களை தேர்வு செய்வதற்கு நாளை மறுநாள் (4ம் தேதி) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com