திண்டுக்கல் மார்க்கெட்டில் மீண்டும் உச்சத்தை எட்டும் சின்ன வெங்காயம்

உள்ளூர் வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் மார்க்கெட்டில் மீண்டும் சின்ன வெங்காயம் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மார்க்கெட்டில் மீண்டும் உச்சத்தை எட்டும் சின்ன வெங்காயம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் வெங்காய மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயம் தரம் பிரிக்கப்பட்டு பல ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக உள்ளூர் வரத்து குறைந்ததால் அதிக அளவு வெளியூர்களில் இருந்தே வரவழைக்கப்படுகிறது.

திருப்பூர், அவினாசி பாளையம், கொடுவாய், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயம் கிலோ ரூ.45 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இவை அனைத்தும் புதிய வெங்காயமாகும்.

இதே போல் பெரம்பலூர், நாமக்கல், வளையபட்டி, எரியோடு, கோவிலூர், குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழைய வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. சமீப காலமாக வரத்து குறைந்ததால் வெளியூரில் இருந்து அதிக அளவு வெங்காயம் வரவழைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படுவதால் அதிக அளவு தேவை ஏற்பட்டுள்ளது. மேலும் இருப்பு வைத்திருந்த விவசாயிகளும் வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பெரிய வெங்காயம் கிலோ ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் சின்ன வெங்காயம் விலை உயர்வு அடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com