இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எங்கள் நோக்கம்- டிடிவி தினகரன் பேட்டி

இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எங்கள் நோக்கம் என்று திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தினகரன் கூறியுள்ளார். #dinakaran #admkleaf #admk
இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எங்கள் நோக்கம்- டிடிவி தினகரன் பேட்டி
Published on

திருச்சி:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர்  டி.டி.வி.தினகரன் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தீயசக்தியான தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். வெளியே வந்தது போல், துரோக சக்தியான அ.தி.மு.க.விடம் இருந்து விலகி வந்து விட்டோம். அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பே இல்லை. முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அனைத்து தரப்பு அடித்தட்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினர்.

ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை போன்ற மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அவர்கள் கொண்டு வரவில்லை. தேர்தல் நேரத்தில் மத்திய அமைச்சர் வேடிக்கையாக பேசியுள்ளார். தற்போதுள்ள மத்திய அரசு வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தொழில் துறையை  வளர்ப்பதாக கூறி விவசாயத்தை அழிக்க நினைக்கின்றனர். 

நாங்கள் துரோக கும்பலை விட்டு ரொம்ப தூரம் தள்ளி வந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #admkleaf #admk

X

Maalai Malar
www.maalaimalar.com