மனிஷ்பாண்டேவை திட்டிய டோனி- சமூக வலை தளங்களில் பரவும் வீடியோ

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரன் எடுக்க மெல்லமாக ஓடியதால் மனிஷ் பாண்டேவை டோனி திட்டினார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. #dhoni #manishpandey
மனிஷ்பாண்டேவை திட்டிய டோனி- சமூக வலை தளங்களில் பரவும் வீடியோ
Published on

செஞ்சுரியனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய பேட்டிங் போது கடைசி ஓவரில் முதல் பந்தை மனிஷ்பாண்டே அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார்.

மறுமுனையில் இருந்து டோனி 2-வது ரன் எடுக்க விரும்பினார். ஆனால் மனீஷ்பாண்டே பந்தை கவனித்தபடி மெல்லமாக ஓடினார்.

இதனால் கோபம் அடைந்த டோனி மனிஷ்பாண்டேவை திட்டினார். இந்தியில் பேசிய டோனி, முகத்தில் கோபத்தை காட்டியபடி மனீஷ் பாண்டேயை பார்த்து ஏதோ கூறினார். இதில் கடைசி வார்த்தைகள் மட்டும் தெளிவாக கேட்டது. அதில், அங்கே என்ன பார்த்துட்டே இருக்க? இங்க பாரு. கவனமாக இரு என்று கூறி உள்ளார்.

களத்தில் எதற்கும் கோபம் அடையாமல் சாந்தமாக இருப்பவர் என்ற பெயரை பெற்ற டோனி கடும் சீற்றத்துடன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. #dhoni #manishpandey

X

Maalai Malar
www.maalaimalar.com