முன்னாள் பாலிவுட் கதாநாயகன் தர்மேந்திரா டுவிட்டரில் இணைந்தார்

இந்தி திரைப்பட உலகின் முன்னாள் ஆக்‌ஷன் நாயகன் தர்மேந்திரா சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்துள்ளார்.
முன்னாள் பாலிவுட் கதாநாயகன் தர்மேந்திரா டுவிட்டரில் இணைந்தார்
Published on

உலகில் உள்ள அனைத்து துறை பிரபலங்களுக்கும், சராசரி நபர்களுக்கும் அன்றாடம் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் இரண்டு வரி எழுதாவிட்டால் எதையோ இழந்துவிட்டதைப் போன்றதொரு வெறுமை உணர்வு அவர்களை ஆக்கிரமித்து விடும்.

காதல் வயப்படுபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களது நிலைபாட்டினை உலகுக்கு தெரிவிக்கும் சாளரமாக விளங்கிவரும் இவ்வகை சமூக வலைத்தளங்களை அரசியல் மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர்கள் ஒரு பிரசார சாதனமாகவே கருதி வருகின்றனர்.

சமீபநாட்களாக, ‘பத்மபூஷன்’ கமல்ஹாசன் தமிழக அரசை சாடி தீப்பொறியாக டுவிட்டரில் வெளியிட்டுவரும் கருத்துகள் தமிழக அரசியலை சூடேற்றி வருகிறது.

இந்நிலையில், இவ்வளவு காலமாக டுவிட்டர் பக்கம் திரும்பிப் பார்க்காத பாலிவுட் முன்னாள் ஆக்‌ஷன் ஸ்டார் தர்மேந்திரா(81) தற்போது டுவிட்டரில் காலடி பதித்துள்ளார். ரசிகர்களின் அன்பு தன்னை அவர்களுடன் மேலும் நெருக்கமாக இருப்பதற்காக டுவிட்டருடன் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஐதராபாத் நகரில் நடைபெறும் இந்திப்பட ஷூட்டிங்கின்போது எடுத்த புகைப்படத்துடன் தனது முதல் பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

தர்மேந்திராவின் டுவிட்டர் பிரவேசத்தை அவரது மகள் பாபி டியோல் மகன் சன்னி டியோல் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்தி வரவேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com