தேவதானப்பட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம்- முதியவர் கைது

தேவதானப்பட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேவதானப்பட்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம்- முதியவர் கைது
Published on

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று கடைக்கு வந்த 13 வயது சிறுமியை கடத்திச் சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை வெளியே சொல்லக் கூடாது எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார். அழுது கொண்டு வந்த சிறுமி தனது தாயிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் செல்வராஜ் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com