

மதுரை:
மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
16 வருடங்களுக்கு பிறகு ஜெனிவாவில் நடந்த 36 வது அமர்வில் 9 கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நான் அதில் 10 முறை பேசினேன்.
எனது முதல் பேச்சே ஈழத்தமிழர்களை கொன்று குவித்த பாவிகளுக்கு வாழ்த்து சொல்வதா என்று குற்றம் சாட்டினேன். ஐ.நா. பொதுச் செயலாளர் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும் என்று சொன்னேன்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியாவும் காரணம். அக்டோபர் 28-ந் தேதி ஈழம் 1987 என்ற நூல் வரவிருக்கிறது. அதில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும்.
டெங்கு பிரச்சினையை பொறுத்த வரை மூன்று மாதத்திற்கு முன்பே அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டும், தமிழக அரசு அதற்கான விழிப்புணர்வோ, முன் நடவடிக்கையோ எடுக்க வில்லை.
அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. மிகவும் குறைவாக உள்ளது. போதுமான மருத்துவர்கள் இல்லை.
தனியார் மருத்துவமனைகள் பெரிய மனதுடன் காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வருவோரை அரவணைக்க வேண்டும். கார்ப்பரேட் மருத்துவமனைகளும் உதவி செய்ய முன்வர வேண்டும்.
நவம்பர் 20-ந் தேதி மாநில சுயாட்சி மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் அனைத்து கட்சிகளையும் அழைக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக விமான நிலையத்தில் ஜெனிவா சென்று திரும்பிய வைகோவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கீரைத்துரை பாண்டி, நிர்வாகிகள் சின்னசெல்லம், மகபூப்ஜான், பாஸ்கர சேதுபதி, சுருதி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.