டெல்லியில், நவம்பர் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத குறைந்த வெப்பநிலை பதிவு

டெல்லியில் நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலும் இந்த ஆண்டு இதற்கு முன்பு இல்லாத வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி:

டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளது. பொதுவாக அக்டோபர் மாதத்தில் 19 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் 12.5 டிகிரியாக வெப்பநிலை பதிவானது. இது கடந்த 26 ஆண்டுகளில் (அக்டோபர் மாதத்தில்) இல்லாத குறைந்த அளவாகும்.

இதைப்போல நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலும் இந்த ஆண்டு இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது. நேற்று அதிகாலை நிலவரப்படி டெல்லியில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 10.8 டிகிரி ஆகும். வெப்பநிலை இப்படி வழக்கத்தைவிட குறைவாக இருப்பதற்கு, மேக மூட்டம் இல்லாததே காரணம் என்று, வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com