

டெல்லியில் திடீர் திடீரென கனமழை பெய்து வருகிறது. ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் தொடர்ந்து பெய்வதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் சாலையோரம் உள்ள கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது திடீரென கால்வாயில் பள்ளம் உருவானது. அந்த பள்ளத்தில் அருகில் இருந்த வீடுகள் சரிந்து புதைந்தது.
இந்நிலையில் இன்று பெய்த மழை காரணமாக டெல்லி அசோகா சாலையில் திடீரென குகை போன்று பள்ளம் உருவாகியது. இது வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆங்காங்கே மழைநீர் சாலைகளில் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சன்ம எழுப்பியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.