மோடி வாழ்க்கை வரலாறு படத்துக்கு தடை கோரிய வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

பி.எம். நரேந்திர மோடி என்னும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் படத்துக்கு தடை கோரிய பொதுநல வழக்கை டெல்லி ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #DelhiHC #PMNarendraModi #NarendraModibiopic
மோடி வாழ்க்கை வரலாறு படத்துக்கு தடை கோரிய வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
Published on

புதுடெல்லி:

சுரேஷ் ஓபராய் மற்றும் சந்திப் எஸ் சிங் ஆகியோரின் தயாரிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்காலம் மற்றும் அரசியலில் அவர் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை விவரிக்கும் வர்த்தகரீதியான வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ் உள்பட 23 மொழிகளில் தயாராகியுள்ளது.

இந்தப் படம் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பி.எம். நரேந்திர மோடி படைத்தை திரையிட கூடாது என மும்பை, டெல்லி மற்றும் அலகாபாத் உயர்நீதி மன்றங்களில் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இதேபோல், தலைமை தேர்தல் ஆணையரிடமும் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இந்நிலையில், பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு தடை கோரிய பொதுநல வழக்கை டெல்லி ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #DelhiHC  #PMNarendraModi #NarendraModibiopic

X

Maalai Malar
www.maalaimalar.com