இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஓட்டு போடுகிறார்

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான 101 வயதான ஷியாம் ஷரன் நெகி ஓட்டுப்போட இருக்கிறார்.
இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஓட்டு போடுகிறார்
Published on

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் பலப்பரீட்சை நிலவுகிறது.

காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 50,25,941 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான 101 வயதான ஷியாம் ஷரன் நெகி என்பவர் வாக்களிக்க இருக்கிறார்.

இவர் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் முதல் ஆளாக வாக்களித்துள்ளார்.
அதன்பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் நெகி தனது வாக்கை பதிவு செய்துள்ளார். அவர் இதுவரை 16 பாராளுமன்ற தேர்தல்களிலும், 14 சட்டப்பேரவை தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com