மூணாறு நிலச்சரிவு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 80 பேர் நிலச்சரிவில் சிக்கினர்.

இதையடுத்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் மீட்புப் பணியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், இன்று நடைபெற்ற மீட்பு பணியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலச்சரிவில் இன்னும் சிலர் மாயமாகி உள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com