மதுரை அருகே 9-ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பலி

கண்மாயில் குளித்த போது 9-ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
மதுரை அருகே 9-ம் வகுப்பு மாணவன் கண்மாயில் மூழ்கி பலி
Published on

மதுரை:

மதுரை ஆத்திக்குளம் கங்கை தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் அஜய் (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி விடுமுறை என்பதால் நேற்று காலை தனது நண்பர்களுடன், அஜய் அருகில் உள்ள நாகனாகுளம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றார்.

சக நண்பர்களுடன் அஜய் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினார். அங்கிருந்து அவரால் கரைக்கு வரமுடியவில்லை. நீச்சலும் தெரியாததால் நீரில் மூழ்கி அஜய் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com